Thursday, 19 January 2017

பெண்களுக்கு வரம் வெண்பூசணி லேகியம்

* உடல்உஷ்ணம் தணிந்திடவும்
* மெலிந்த உடல் ஊட்டமாகவும்
* காமாலை நீங்கிடவும்
* சிறுநீரகம் பலப்படவும்
* ஆண்மை ஓங்கிடவும்
* பெண்களின் வெள்ளை,வெட்டை நீங்கிடவும்......
ஒரே லேகியம்
" வெண்பூசணி லேகியம்"
-----------------------------------------
இதனை காலை ,இரவு உணவுக்கு பின் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு பால் அருந்தவும்.
--------------------------------------------------------------
வெண்பூசணி லேகியம் செய்முறை:
------------------------------------------------------------
வெண்பூசணி சாறு--- 6 லிட்டர்
தாழம்விழுது சாறு ---- 1.5 லிட்டர்
தென்னம்பூ சாறு ------- 1.5 லிட்டர்
எலுமிச்சை பழ சாறு --- 1.5 லிட்டர்
பசும்பால் --- 1.5 லிட்டர்
நாட்டு சர்க்கரை ---------- 300 கிராம்
சீரகம் ---------------------------- 30 கிராம்
கொத்தமல்லி -------------- 30 கிராம்
கோஷ்டம் ------------------- 30 கிராம்
ஏலரிசி. ------------------ 30 கிராம்
ஜாதிக்காய். ---------------------- 30 கிராம்
ஜாதிபத்திரி -------------------- 30 கிராம்
மிளகு. --------------------- 30 கிராம்
மாசிக்காய். --------------------- 30 கிராம்
அதிமதுரம். -------------------------- 30 கிராம்
தாளிசம். ------------------------------- 30 கிராம்
தேன். ------------------------------ 700 கிராம்
நெய். -----------------------------------700 கிராம்
கடை சரக்கு சாமான்களை வாங்கி தூளாக்கி
சலித்து வைத்துக்கொண்டு சாற்றினை அடுப்பில் வைத்து பாகுபதம் வந்தவுடன் பொடிகளை கொட்டி கிண்டி ,பின் அத்துடன்
கடைசியாக உள்ள தேன்,நெய்இவற்றை ஊற்றி
கிண்டி எடுக்கவும்.லேகியம் தயார்.
ஆதாரம்:
"அகத்தியர் வைத்திய இரத்தின சுருக்கம்"....
.

No comments:

Post a Comment