Thursday, 16 March 2017

சொரியாசிஸ் நீக்கும் சேராங்கொட்டை குழித்தைலம்


அம்மை நோய் வராமல் காக்க ...

அம்மை நோய் வராமல் காக்க ...
*************************************
தற்கால வெப்ப நிலை மாற்றம். அம்மை நோய் வர சாதகமாக அமையலாம் அதை தவிர்க்க ...
நாட்டு மருந்து கடையில் கிடைக்கக்கூடிய
பாதாம் பிசின் ,சப்ஜாவிதை இவைகளை வாங்கி தேவையான அளவில் தண்ணீர் எடுத்து அதில் பாதாம் பிசின் ,சப்ஜாவிதை இரண்டும். சம அளவில் எடுத்து போட்டு ஓர் இரவு ஊறவைத்து காலை யில் அது ஜெல் போல இருக்கும் அதில் சிறிது நாட்டு சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம் 
சிறுவர் களுக்கு மூன்று ஸ்பூன்,
பெரியவர்கள் ஒரு டம்ளர் சாப்பிடவும்

Tuesday, 14 March 2017

விரல்சுத்தி சரியாக

விரல்சுத்தி சரியாக...
**************************
ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து ஒரு ஓட்டைபோட்டு கட்டைவிரலில் சொருகிவிடவும்
பழுத்து உடைந்த பின்
கோவைஇலை,வேப்பிலை,மஞ்சள் தூள் மருதாணிஇலை இவைகளை அரைத்து பேஸ்ட் பதத்தில் அந்த இடத்தில் வைத்து
கட்டிவரவும் சில நாட்களில் சரியாகிவிடும் .

Monday, 6 March 2017

சிறுநீரக செயலிழப்பை சரிசெய்ய இயற்கை மருத்துவம்



சிறுநீரக செயலிழப்பை சரிசெய்ய இயற்கை மருத்துவம்

பெண்கள் முகத்தில் முடிவளர்வதை நீக்க இயற்கையான எளிய வழி

பெண்கள் முகத்தில் முடிவளர்வதை நீக்க இயற்கையான எளிய வழி

* கசகசா
* கஸ்தூரி மஞ்சள்
* கள்ளமாவு
இவைகளை அரைத்து பசைபோன்று எடுத்து இதை தயிரில் குழைத்து முடி உள்ள இடத்தில் பூசி நன்கு காய்ந்த பின் முகம் கழுவலாம் தினசரி செய்துவர முடிநீங்கிவிடும்.


கண் பார்வை தெளிவாக

கண் பார்வை தெளிவாக
கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து இடித்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.
பாகல் இலைகளை சிறிதளவு எடுத்து அதனுடன் ஆறு மிளகைச் சேர்த்து மைப் போல அரைத்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக கண்களை சுற்றிக் கனமாகப் பூசவேண்டும். பின்பு காலையில் எழுந்தவுடன் கழுவி விடவேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் கண் பார்வை குறைபாடு குறையும்
.

மூச்சுபிடிப்பு நீங்க மருந்தில்லா மருத்துவம் எளிய " கப்பிங் தெரபி ' காணொலி...



மூச்சுபிடிப்பு நீங்க
மருந்தில்லா மருத்துவம்...
************************************
எளிய " கப்பிங் தெரபி ' காணொலி...




Sunday, 5 March 2017

தொடர் விக்கல் நிற்க..

தொடர் விக்கல் நிற்க..
***************************
அரிசி திப்பிலி
சீரகம் 
இரண்டையும் தனித்தனியாக இலேசாக வருத்து பொடியாக்கி
சலித்து நைசாக வைத்துக்கொண்டு
அரிசி திப்பிலி பொடிஅரை டீஸ்பூன்
சீரகம் பொடி அரை டீஸ்பூன்
இவற்றை பால் அல்லது தேனுடன்
கலந்து சாப்பிட தொடர் விக்கல்
நிற்கும்.
Image may contain: food

பெண்களுக்கு மட்டும்..



பெண்களுக்கு மட்டும்..
********"*******************
மாதவிடாய் காலங்களில் நீடித்த போக்கு இருப்பின்
"அசோக அரிஸ்டம்" என்ற மருந்து
டானிக் போன்று இருக்கும் இதை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி தினசரி காலை, மாலை வெறும் வயிற்றில் 30 மிலி உடன் 30 மிலி தண்ணீர் கலந்து அருந்திவர நாட்பட்ட மாத ஒழுக்கு கட்டுப்படும்.இதை அனைத்து மகளிரும் சாப்பிட்டுவர பல பிரச்சினைகள் தீரும்.
அந்த அதிகபடியான நாட்களில் இத்துடன் உள்ள காணொலியில் உள்ளபடி தினசரி ஒரு முறை மட்டும்
செய்துவர விரைவில் போக்கு நிற்கும்.


அடிபட்ட வீக்கம், முறிந்த எலும்பு கூட,

அடிபட்ட வீக்கம், முறிந்த எலும்பு கூட,
இரத்தக் கட்டு, ஜவ்வுகிழிதல் சீராக....
*****************************************
" ஊசிப்பாலை "
எளிதில் கிடைக்கக்கூடிய, வேலி, செடி,புதர் பகுதியில் படர்ந்திருக்கும்
கொடிஇனம் இது.
இதை ஊசிப்பாலை என்றும்கூறுவர்,
இதன் இலை,பூக்களை பறித்து நன்கு மைய அறைத்து ( தண்ணீர் விடாமல்) மேலே பற்றிட மேல் கூறிய பிரச்சினைகள் மிக எளிதில் தீரும்

தொடர் இருமல்,தொண்டை புகைச்சல் தீர...

தொடர் இருமல்,தொண்டை புகைச்சல் தீர...
**************************
அதிமதுரம் ஒரு பட்டாணி அளவு எடுத்துக்கொண்டு
ஒரு வெற்றிலையில் சிறிது தேன் தடவி 
அதில் மூன்று மிளகை வைத்து அந்த
அதிமதுர துண்டை வைத்து
வெற்றிலை போடுவதுபோல் வாயில்
அடக்கிவைத்துக்கொண்டு
உமிழ்நீரை விழுங்கிவரவேண்டும்.

Image may contain: 1 person, close-up
No automatic alt text available.

மூட்டுவலி தீர...

மூட்டுவலி தீர...
********************
பொதுவாக மூட்டுவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
அதில் மலச்சிக்கல் மற்றும் வாய்வு பிரச்சனை ஒரு காரணமாக உள்ளது.
இதனைக் குணப்படுத்தும் மருந்துகள் சித்த மருத்துவ
முறையினில் ஏராளமாக உள்ளது.
மருந்துகள் :
1 -முடக்கத்தான் கீரை இலை -2 கைபிடி அளவு எடுத்து இதனுடன் பூண்டு -2 பல்,மிளகு ,சீரகம் சிறிது,தக்காளி
ஒன்று,தண்ணீர் -2-டம்ளர் சேர்த்து கொதிக்க வைத்து
சூப் செய்து சாப்பிடவும்.
இது போல் வாரம் மூன்று முறை சாப்பிட்டு வர ஆரம்ப நிலையில் உள்ள மூட்டு வலி எளிதில் குணமாகும்.
2 -வாயு சூரணம் :
சுக்கு -50 -கிராம்
மிளகு -50 -கிராம்
திப்பிலி -50 -கிராம்
சீரகம் -50 -கிராம்
ஏல அரிசி -25-கிராம்
இவைகளை லேசாக வறுத்து இடித்து பொடி செய்து
கொள்ளவும்.
இதில் காலை, மாலை -உணவிற்கு முன் கால் டீஸ்பூன் அளவு எடுத்து வாயிலிட்டு வெந்நீர் சாப்பிடவும்.
உடலில் சகல வாயுப் பிரச்சனைகளும் தீரும்.பசி
நன்கு எடுக்கும்.மூட்டு வலி ,குதிக்கால் வலி தீரும்.
இதற்கு மேற் பிரயோகமாக முந்தய பதிவில் குறிப்பிட்ட
"வாத நாராயணன் தைலம்"செய்து தடவலாம்.
============================================================
வாத நாராயணன் -Delonix elata - வாத மடக்கி தைலம் செய்முறை
வாத நாராயணன் -Delonix elata
இதன் வேறு பெயர்கள் :-
வாதரக் காய்ச்சி, வாத மடக்கி, வாத நாசினி
இதன் இலையை அரிசி மாவுடன் சேர்த்து அடை போல் சுட்டு
உண்ணலாம்.வாரம் 3-முறை பயன்படுத்தலாம். இதனால் வாத வலி,மூட்டு வீக்கம்,குத்தல்,குடைச்சல் தீரும்.
இதன் இலைச்சாறு 1-அவுன்ஸ் அளவு குடித்து வர இரண் டொரு முறை மலம் கழியும் வாத குடைச்சல்,வீக்கம்,வலி தீரும்.
நீரில் இதன் இலையை போட்டு கொதிக்க வைத்து குளிக்க உடல் வலி,அலுப்பு தீரும்.
வாத மடக்கி தைலம் செய்முறை :
1 - வாத மடக்கி இலைச்சாறு - 1-லிட்டர்
2 - நயம் விளக்கெண்ணை - 1-லிட்டர்
3 -சுக்கு - 40 - கிராம்
4 - மிளகு - 40 - கிராம்
5 - திப்பிலி - 40 - கிராம்
6 - வெண் கடுகு - 10-கிராம்
மேற் குறிப்பிட்ட 4-சரக்குகளை வாத மடக்கி இலைச்சாறு விட்டு அரைத்து எண்ணையுடன் கலந்து பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொள்ளவும்.
இதனை இரவு படுக்கும் போது 2-டீஸ்பூன் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிடவும்.காலையில் மலம் ஓரிரு முறை கழியும்.
இதனால் தீரும் நோய்கள் :-
வாத ரோகம்,கீல்வாயு,குதிக்கால் வலி,முடக்கு வாதம், நடுக்கு வாதம்,நரம்புத் தளர்ச்சி,கை கால் குடைச்சல், நரித்தலை வாதம் முழங்கால் முட்டி வீக்கம் போன்ற அனைத்தும் தீரும்.
Image may contain: one or more people and people sitting

தாய்ப்பாலுக்கு இணை தேங்காய் பால்

தாய்ப்பாலுக்கு இணை
தேங்காய் பால்
************************************
தேங்காய் உபயோகம்
மாரடைப்பில் முடியும்
என்று நிறைய பேர்
கைவிட்டனர்.
உண்மை இதோ,
பச்சை தேங்காயின் பயன்கள்:-
தேங்காயை பச்சையாக
ஒரு வேலை உணவாக
எடுப்பதினால் ஏற்படும்
நன்மைகள்....
* பொதுவாக தேங்காயில்
அதிகமாக கொழுப்பு உள்ளது
என்பது உண்மைதான்....!
ஆனால்,
எப்பொழுது கொழுப்பு
உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான்...,
தேங்காய் கொழுப்பாய் மாறும்!
* தேங்காயை உடைத்த
அரைமணி நேரத்திற்க்குள்
பச்சையாக சாப்பிட்டுவிட்டால்,
அதுதான் அமிர்தம்......!
* சகலவிதமான நோய்களையும்
குணமாகக்கும்........!
உடம்பில் உள்ள
கெட்ட கொழுப்பு மற்றும்
அழுக்குகளை அகற்றும்...!
இரத்தத்தை சுத்தமாக்கும்!!
* உடலை உரமாக்கும்......!
* உச்சிமுதல் பாதம்வரை
உள்ள உருப்புகளை
புதுப்பிக்கும்!
தேங்காய்க்கும் நமக்கும்
உள்ள ஒற்றுமை:
நாம்,
அன்னை வயிற்றிலிருந்து
பூமிக்குவர 10 மாதம்.....!
அதுபோல...,
தேங்காய் கருவாகி பூமிக்கு
வர 10 மாதம் ஆகும்....!
இனி முடிந்த அளவு
தேங்காயை பச்சையாக
உண்போம்...!
🕊குறிப்பு:-🕊
**************
🚨தேங்காயை குருமா
வைத்து சமைத்து உண்டால்
கெட்ட கொழுப்பாக
(கொலஸ்ட்ரால்) மாறிவிடும்.
👌சமைக்காமல் அப்படியே
உண்டால் நல்ல கொழுப்பு
(கொலஸ்ட்ரால்).....!
👌தேங்காயை துருவி சிறிது
நாட்டு சர்க்கரை சேர்த்து
குழந்தைகளுக்கு மாலை
சிற்றுண்டியாக அளியுங்கள்!
அவ்வளவு ஆரோகியம்...!!
👌பழங்காலத்தில், இறக்கும்
தருவாயில் இருக்கும்
நபர்களுக்கு தேங்காய் பால்
கொடுத்து, வாழ்நாட்களை
நீட்டிப்பு செய்துள்ளார்கள்!
ஆனால் இப்போது,
மாட்டு பால் ஊற்றி
துக்கத்தில் ஆழ்கிறார்கள்..!
👌தாய்ப்பாலுக்கு மாற்றாக,
தேங்காய் பாலை
குழந்தைகளுக்கு கொடுத்து
காப்பாற்றி இருக்கிறார்கள்!
🚨ஆனல் இப்போது,
இரசாயண கலவையுடன்
பாக்கெட் பால்.
..Image may contain: food...🤔

ஆஸ்துமா நோய் நிரந்தரமாக நீக்கும்.. " நஞ்சறுப்பான் கொடி "

ஆஸ்துமா நோய் நிரந்தரமாக நீக்கும்..
" நஞ்சறுப்பான் கொடி "
**************************************
நஞ்சறுப்பான் மூலிகை வேலியில்
படர்ந்து வளரும்.இலைகளை கிள்ளினால் வெளிர்மஞ்சள்நீர் வடியும்.
சாணிப்பாலை
கொண்டைபாலை
நஞ்சுமுறிச்சான் எனவும் அழைப்பர்.
இதன் நான்கு இலைகளை மட்டும்
பத்து மிளகுடன் சேர்த்து
மென்றுதின்று
வென்னீர் குடிக்கவும்.
45 நாட்கள் தொடர்ந்து
காலை உணவுக்கு பிறகு
தினசரி ஒருவேளை மட்டும்
சாப்பிட்டுவர
ஆஸ்துமா,மார்புசளி,நுரையீரல்
தொடர்பான பிணிகள் நீங்கும்
Image may contain: plant, flower and nature

உடலில் அடிக்கடி வாயுவால் ஏற்படக்கூடிய குத்தல்,குடைச்சல் நீங்க...

உடலில் அடிக்கடி வாயுவால் ஏற்படக்கூடிய குத்தல்,குடைச்சல் நீங்க...
***************************************
பெருங்காயம் ஒரு பாக்களவு எடுத்து
இரண்டு மூன்றாக உடைத்து அதை
வருத்து, பின்பு தூளாக்கி 100 மிலி 
சுடுநீரில் சாப்பிடவும்.
இரவு ஒரு கடுக்காய் கொட்டையை எடுத்து அதில்உள்ள பருப்பு நீக்கி,
தோலைமட்டும் நசுக்கி 150 மில்லி நீரில் இட்டு , காய்ச்சி பாதியாக வந்தவுடன் வடிகட்டி இரவு உணவுக்கு
பின் சாப்பிட்டுவரவும்.
Image may contain: food
No automatic alt text available.

மாதவிடாய் கால வயிற்று வலி நீங்கிட...

மாதவிடாய் கால வயிற்று வலி நீங்கிட....
************************************
பூண்டுபல் ஒன்று எண்ணிக்கை
மிளகு மூன்று எண்ணிக்கை
பெருங்காயம் பட்டாணி அளவு
பெருங்காயத்தை வருத்து பொடியாக்கி, அத்துடன் மிளகு,பூண்டு ஆகியவற்றை
மேலே குறிப்பிடப்பட்ட அளவு எடுத்து
நசுக்கி பொடித்து இவற்றை
உப்பு போட்ட மோர் உடன் கலந்து
அருந்த மாதவிடாய் கால வயிற்றுவலி நிற்கும்

தேள் கடி விஷம் இறங்க...

தேள் கடி விஷம் இறங்க...
****************************
தேள் கடித்த இடத்தில் துளசி இலைகளை கசக்கி தேய்த்துவிட்டு ,
துளசி சாறு ஒரு அவுன்ஸ் குடிக்கவும், அல்லது ஓர் கைப்பிடி அளவு இலையை மென்று சாப்பிடவும்,
மேலும் இரு கண்களிலும் உப்பு கலந்த நீர் தலா இரு சொட்டுகள் விட
தேள்கடி விஷம் இறங்கும்

No automatic alt text available.Image may contain: plant, outdoor and nature

கல்லீரல் பிரச்சினை நீங்க.. " கீழாநெல்லி *

கல்லீரல் பிரச்சினை நீங்க..
**"****************************
" கீழாநெல்லி *
இதை மூன்று நாட்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில்
100 மிலி ஆட்டுப்பாலுடன். 5 கிராம் கீழாநெல்லி அரைத்த சாந்தை கலக்கி குடிக்கவேண்டும்
Image may contain: plant, nature and outdoor